மரத்தில் கார் மோதிஆசிரியரின் மனைவி பலி
சங்கரன்கோவில் அருகே மரத்தில் கார் மோதியதில் ஆசிரியரின் மனைவி பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே மரத்தில் கார் மோதியதில் ஆசிரியரின் மனைவி பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆசிரியர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 42). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அய்ய புஷ்பம் (39). இவர்களுக்கு சரண் (13) என்ற மகனும், செல்வ துர்கா (5) என்ற மகளும் உள்ளனர். இவர்களின் உறவினர் அருணகிரி சாமி (40).
இவர்கள் அனைவரும் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியநாயகிபுரத்திற்கு செல்வதற்கு நேற்று காரில் வந்தனர். காரை அருணகிரி சாமி ஓட்டி வந்தார்.
மனைவி பலி
சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் பகுதியில் வரும் போது, சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அய்ய புஷ்பம் பரிதாபமாக உயிரிழந்தார். செல்லத்துரை, சரண், செல்வ துர்கா, அருணகிரி சாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.