கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் கெவின் (வயது 25). இவர் சொந்த வேலையாக காரில் திருச்சிக்கு சென்று விட்டு மீண்டும் அருப்புக்கோட்டை வழியாக ஊர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சி அருகே கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த சந்தோஷ் கெவின் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story