கட்டுப்பாட்டை இழந்த கார், 150 அடி பள்ளத்தில் பாய்ந்தது


கட்டுப்பாட்டை இழந்த கார், 150 அடி பள்ளத்தில் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார், 150 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதில் இருந்த பெண் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார், 150 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதில் இருந்த பெண் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

கட்டுப்பாட்டை இழந்தது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இது முக்கிய சாலை என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி கார் ஒன்று சென்றது. அப்போது நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரம் வைத்து இருந்த அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது மோதியது. தொடர்ந்து தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்து சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

2 பேர் மீட்பு

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காரில் இருந்த பெண் உள்பட 2 பேரை லேசான காயங்களுடன் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூடலூரை சேர்ந்த நான்சி உள்பட 2 பேர் என்பது தெரியவந்தது. விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இதற்கிடையில் தேயிலை தோட்ட பள்ளத்தில் விழுந்து கிடந்த காரை மீட்கும் பணி நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே வாகன விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும். எனவே மலைப்பகுதி சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றனர்.


Next Story