சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது


சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
x

திசையன்விளை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

திருநெல்வேலி

திசையன்விளை:

ஈரோடு பெரியண்ணன் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). இவரது மனைவி கிருத்திகா தேவி (38). இவர்கள் இருவரும் நெல்லையில் இருந்து திசையன்விளைக்கு காரில் வருது கொண்டிருந்தனர். காரை கிருத்திகா தேவி ஓட்டி வந்தார். மன்னார்புரத்தை அடுத்த ஏரந்தை விலக்கு பகுதியில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story