சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் இறந்தனர்.. பலியான 2 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் இறந்தனர்.. பலியான 2 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள்.
கார் கவிழ்ந்தது
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(வயது 57). இவருடைய நண்பர்கள் ராக்லாண்ட்(60), பொன்ராஜ்(48), செபஸ்டியன் (48). இவர்கள் 4 பேரும் காரில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டு இருந்தனர். சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்துரெட்டிப்பட்டி விலக்கு அருகே கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. பின்னர் அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் பலி
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ராக்லாண்டை அனுப்பி வைத்தனர். இவரும் செல்லும் வழியிலேயே இறந்தார். பொன்ராஜ், செபஸ்டியன் ஆகிய 2 பேரும் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.