புதிதாக கட்டப்படும் பாலத்துக்குள் கார் கவிழ்ந்தது
வீரவநல்லூரில் புதிதாக கட்டப்படும் பாலத்துக்குள் கார் கவிழ்ந்தது
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
திருச்செந்தூர்-பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வீரவநல்லூர் புறவழிச்சாலையில் தனியார் ஆலை அருகில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு வாகனங்கள் செல்லும் வகையில், பாலம் அருகில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக புதிய பாலத்துக்குள் பாய்ந்து செங்குத்தாக கவிழ்ந்து கிடந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story