வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் திருட்டு


வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் திருட்டு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் திருட்டு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் ராஜபாதை பகுதியை சேர்ந்தவர் அப்சனா (வயது 27). இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது காரை காணாததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து அப்சனா கோட்டார் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காரை யாரேனும் திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.


Next Story