காவலாளியை பலிவாங்கிய கார், இரும்பு தடுப்பில் மோதி நின்றது


காவலாளியை பலிவாங்கிய கார், இரும்பு தடுப்பில் மோதி நின்றது
x

விருதுநகரில் காவலாளியை பலிவாங்கிய கார், இரும்பு தடுப்பில் மோதி நின்றது

விருதுநகர்


அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). இவர் விருதுநகர் நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் பணிக்கு புதிய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நெல்லையிலிருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த கார், திடீரென தடுப்பு வேலியை தாண்டி சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அந்த கார் சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பிலும் பயங்கரமாக மோதி நின்றது. இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்களில் வந்த வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக விருதுநகர் பஜார் போலீசார் விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த நெல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் அதிகாரி பிரான்சிஸ் ராஜா (60) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story