விக்கிரவாண்டி அருகே குளத்துக்குள் சீறிபாய்ந்த கார் 5 மாணவர்கள் உயிர்தப்பினர்


விக்கிரவாண்டி அருகே  குளத்துக்குள் சீறிபாய்ந்த கார்  5 மாணவர்கள் உயிர்தப்பினர்
x

விக்கிரவாண்டி அருகே குளத்துக்குள் காா் சீறிபாய்ந்தது. இதில் 5 மாணவர்கள் உயிர்தப்பினாா்கள்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மதியம் இவர், தன்னுடன் படித்து வரும் 5 நண்பர்களுடன் ஒரு காரில் விக்கிரவாண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கார் பனையபுரம் அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குளத்துக்குள் சீறி பாய்ந்தது. அதிர்ஷ்ட வசமாக குளத்தில் தண்ணீர் ஏதும் இல்லாமல் இருந்ததுடன், இந்த விபத்தில் 5 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்கள். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story