நாமக்கல்லில் விதிகளை மீறிய காா், 5 லாரிகள் பறிமுதல்


நாமக்கல்லில் விதிகளை மீறிய காா், 5 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 5:17 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகளில் தார்ப்பாய் போடாமல் மணல் ஏற்றி செல்லப்படுவதாகவும், அதனால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகும் புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் தார்ப்பாய் போடாமல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளும், தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் இருந்த 3 லாரிகளும் என மொத்தம் 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்தியதாக ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் தலைக்கவசம் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் வந்த 15 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் விதம் விதிக்கப்பட்டு, ரூ.15 அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story