கார் திருடியவர் சிக்கினார்


கார் திருடியவர் சிக்கினார்
x

கூடங்குளம் அருகே கார் திருடியவர் சிக்கினார்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள வைராவி கிணறு ஊரைச் சேர்ந்த பச்சைமால் என்பவருடைய மகன் மாடசாமி (வயது 38). இவருக்கு சொந்தமான காரை, ஒருவரது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது காரை காணவில்லை. இதுபற்றி கூடங்குளம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வைராவிகிணறு ஊரைச் சேர்ந்த சின்னத்துரை மகன் அஜித்குமார் (27) என்பவர் கார் திருடியதும், அந்த கார் கோவையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்து கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக அஜித்குமாரையும் போலீசார் கைது செய்தனர். அவர் மீது திருட்டு, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.


Next Story