பெண் ஓட்டி சென்ற சரக்கு ஆட்டோ விபத்தில் சிக்கியது


பெண் ஓட்டி சென்ற சரக்கு ஆட்டோ விபத்தில் சிக்கியது
x

பெண் ஓட்டி சென்ற சரக்கு ஆட்டோ விபத்தில் சிக்கியதரல் பரபரப்பு ஏற்பட்டுளள்ளது.

கரூர்

நொய்யல் அருகே உள்ள குந்தாணிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). சரக்கு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மனைவி திவ்யா (35). இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள கோவில் விசேஷத்திற்காக பொருட்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கோவில் வளாகத்தில் கொண்டு போய் கணவன்-மனைவியும் இறக்கினார். பின்னர் திவ்யா, தனது கணவர் பிரபாகரனை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திவ்யா ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி அந்தப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் மீது மோதியது. இதில் சரக்கு ஆட்டோவின் முன் பகுதி சேதமடைந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி திவ்யா படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிக்கி படுகாயம் அடைந்த திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story