சரக்கு முனையத்தைவிரைவில் தொடங்க வேண்டும்


சரக்கு முனையத்தைவிரைவில் தொடங்க வேண்டும்
x

சரக்கு முனையத்தைவிரைவில் தொடங்க வேண்டும்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு போக்குவரத்து மையத்தை விரைவில் துவக்க வேண்டும் என்றுபட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

3 ரெயில்கள்

திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு தற்சமயம் திருவாரூர்-காரைக்குடி சிறப்பு விரைவு பயணிகள் ரெயில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரெயில், செகந்திராபாத்-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் ஆகிய மூன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர தினசரி விரைவு ரெயில், தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை விரைவு ரெயில், சோழன் அதிவேக விரைவு ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக காரைக்குடி-மயிலாடுதுறை விரைவு ரெயில் ஆகிய ரெயில்களை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கம் ரெயில்வே வாரிய தலைவர் மற்றும் தெற்கு ரெயில்வே சென்னை ரெயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சரக்கு முனையம்

மேலும், பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கீழ்க்கண்ட கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மனுவில் "மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது பட்டுக்கோட்டை ரெயில் நிலைய சரக்கு முனையத்தில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மற்றும் அரிசி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

வேளாண்மைக்கு தேவையான ரசாயன உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தன. அகல ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்ட பிறகு தற்சமயம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் லாரிகள் வந்து செல்லும் வகையில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்து முனையத்திற்கான அலுவலக கட்டிட பணிகள் நடந்து வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தை விரைந்து ெதாடங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

நல்ல வருமானம்

இதனால் இந்த பகுதியில் விளைகின்ற நெல் சேதமடையாமல் நாட்டின் பிற பகுதிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கவும், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி தொடர்ந்து கிடைத்திடவும், ஜவுளிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் இறக்குமதி செய்திடவும் தேங்காய் போன்ற வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதி செய்திடவும் இதன் மூலம்ரெயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைத்திடவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story