பனை மரங்களை வெட்டியவர் மீது வழக்கு


பனை மரங்களை வெட்டியவர் மீது வழக்கு
x

நெல்லை அருகே பனை மரங்களை வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பனை மரங்கள் உள்ளன. இங்கிருந்த 11 பனை மரங்களை மர்ம நபர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபாலசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை, கோபாலசமுத்திரம் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த வீரபத்ரராஜா (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story