நாட்டாமையை தாக்கியவர் மீது வழக்கு


நாட்டாமையை தாக்கியவர் மீது வழக்கு
x

நாட்டாமையை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 46). நாட்டாமையான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமலிங்கத்தின் மகன் தர்மராஜ் என்பவருக்கும் கோவில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று செல்வராஜ் மற்றும் தர்மராஜ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தர்மராஜ் தாக்கியுள்ளார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் தர்மராஜ் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story