ஈரோடு மாட்டுச்சந்தை களைகட்டியது
ஈரோடு மாட்டுச்சந்தை களைகட்டியது.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகளும், 50 கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்தன. இந்த மாடுகளை வாங்குவதற்கு வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தார்கள். இதனால் மாடுகளின் விற்பனை களைகட்டியது.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறுகையில், "பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. அதேபோல் இந்த வாரமும் அதிகமான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாடுகளை விற்பனை செய்துவிட்டு பணத்தை கொண்டு செல்பவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது", என்றனர்.
Related Tags :
Next Story