தொடக்கப்பள்ளி மேற்கூரையின் சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது


தொடக்கப்பள்ளி மேற்கூரையின் சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது
x

தொடக்கப்பள்ளி மேற்கூரையின் சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது. புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

அணைக்கட்டு ஒன்றியம் சின்ன கங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முழுவதும் சேதம் அடைந்து மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு பாதுகாப்பாற்ற நிலையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான முகாம் நடந்தது. அப்போது பள்ளியின் மேற்கூரை பால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. முகாமில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள் காயம் இன்றி தப்பினர்.

அந்தப் பள்ளியை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story