வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது


வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது
x
திருச்சி

துறையூரை அடுத்த பச்சமலை கோம்பை ஊராட்சி முத்திகிராமத்தில் பழங்குடியின மக்களுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு 40 வீடுகளை கட்டி கொடுத்தது. இதில் பெரும்பாலான வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரையில் சிமெண்டு பூச்சு அவ்வப்போது, இடிந்து விழுந்து வருகிறது.இங்குள்ள ஒரு வீட்டில் ராமகிருஷ்ணன் (வயது 55). இவரது மனைவி லட்சுமி ஆகியோர் தங்கி இருந்தனர். இந்த நிலையில் இந்த வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது. சமீபத்தில் பெய்த மழையால் இடிந்த சிமெண்டு பூச்சு வழியாக மழைநீர் ஒழுகுகிறது. ராமகிருஷ்ணன் உடல்நலம் பாதிப்படைந்து இருப்தால் பாதுகாப்புக்காக அவர் மனைவி வீட்டுக்குள் குடைபிடித்தபடியே இருந்து வருகிறார். இந்த காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுபற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறும்போது, அரசு கட்டிகொடுத்த பெரும்பாலான வீடுகளிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இந்த வீடுகளை சீரமைக்க கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Related Tags :
Next Story