மத்திய, மாநில அரசுகள் விருது வழங்க வேண்டும்


மத்திய, மாநில அரசுகள் விருது வழங்க வேண்டும்
x

மத்திய, மாநில அரசுகள் விருது வழங்க வேண்டும்

தஞ்சாவூர்

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் கூறினார்.

மிகப்பெரிய நடராஜர் சிலை

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் வரதராஜன் சகோதரர்கள் உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்துள்ளனர். 1,500 கிலோ எடையில் 23 அடி உயரமும், 17 அடி அகலமும் கொண்ட இந்த சிலை ஒரே வார்ப்பில் ஐம்பொன் சிலையாக செய்யப்பட்டது.

திம்மக்குடி பகுதியில் உள்ள இந்த ஐம்பொன் உலோக சிலையை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று நேரில் பார்வையிட்டு பூஜைகள் செய்து வழிபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுகள், பொற்கிழி

உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்த திம்மக்குடி வரதராஜன் சகோதரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும். திருவாடுதுறை ஆதீனத்தின் மூலம் சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்புகள் தமிழகத்தில் 25 இடங்களில் நடைபெறுகிறது.

திருமுறை பயிற்சி மையங்கள் 112 இடங்களில் செயல்படுகிறது. இங்கு பயின்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் திருவாடுதுறை ஆதீனத்தில் நடைபெறும் குருபூஜை விழாவின்போது விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story