சமூக நலத்திட்டங்களில் இலவசம் கூடாது என மத்திய அரசு கூறவில்லை


சமூக நலத்திட்டங்களில் இலவசம் கூடாது என மத்திய அரசு கூறவில்லை
x

சமூக நலத்திட்டங்களில் இலவசம் கூடாது என்று மத்திய அரசு ஒருபோதும் சொல்லவில்லை என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறினார்.

விருதுநகர்

சமூக நலத்திட்டங்களில் இலவசம் கூடாது என்று மத்திய அரசு ஒருபோதும் சொல்லவில்லை என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறினார்.

பெரிய வெற்றி

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. கட்சி கொடியை பின்தள்ளி விட்டு தேசிய கொடி ஏந்தி தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்தி வருகிறது. இதில் கட்சி சின்னம் இடம் பெறுவதில்லை. திராவிட மாடல் என்று சொல்பவர்கள் கூட வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளனர்.

இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணனுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு கட்சி காரணம் அல்ல. அவர் மாவட்ட தலைவராக இருந்தபோது மதுரை மாவட்டத்தில் மதவாத அடிப்படையில் கட்சியை நடத்தவில்லை. பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவர் காஜாஷெரீப் தாக்கப்பட்ட போது அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லை. காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு மாலையில் கட்சி வேட்பாளராக வாய்ப்பு தரப்பட்டது.

இலவசம் கூடாது

மாவட்ட தலைவராக பொறுப்பு தரப்பட்டது. எனவே அவரது மன உளைச்சலுக்கு கட்சி பொறுப்பாகாது. சமூக நலத்திட்டங்களில் இலவசம் கூடாது என்று மத்திய அரசு கூறவில்லை. பல்வேறு இலவச நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பொழுது நலத்திட்டங்களில் இலவசம் கூடாது என பிரதமர் மோடி எப்படி சொல்வார்.

எனவே முதல்-அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல. ஒரே நாடு, ஒரே தேர்வு கூடாது என்று சொல்வதற்கு ப. சிதம்பரம் ஒன்றும் மாநில முதல்-அமைச்சர் அல்ல. ஒரே நாடு, ஒரே கட்சி என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு இந்த நாடு பிரதமருக்கு பின்நிற்கும் என்ற எண்ணத்தில் தான் நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பா.ஜ.க. எப்போதுமே மதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ெரயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து நகராட்சியில் உள்ள காமராஜர் சிலை வரை தேசியக்கொடிஏந்தி பா.ஜ.க.வினர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.


Next Story