மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்மத்திய பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போடுகிறதுசேலம் பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்மத்திய பா.ஜ.க. அரசு  இரட்டை வேடம் போடுகிறதுசேலம் பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
சேலம்

சேலம்

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டி பேசினார்.

பொதுக்கூட்டம்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சேலம் மணக்காட்டில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., ஜனதாதளம் ஆகிய கட்சிகளும், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து முயற்சிகள் செய்கின்றன. ஆனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சையில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறி உள்ளது. காவிரி பிரச்சினையில் தமிழக உரிமையை காலில் போட்டு மிதிக்கிறார்கள்.

தயங்க மாட்டேன்

அதேபோல், தமிழர்களுக்கும் இனம், மொழி. உணர்வு இருக்க வேண்டும். ேமகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசானது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார்கள்.

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழ் சமூகத்தின் உரிமைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை உதறிவிட்டு களத்தில் இறங்கி போராடவும் நான் தயங்க மாட்டேன்.

அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளனர். பதிலுக்கு அமலாக்கத்துறையினரை நாம் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தால் மத்திய அரசு நம்மை தேடி வந்திருப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியாயமாக செயல்பட்டுள்ளார்.

எச்சரிக்கை

மாநில சுயாட்சியை பறிக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் அதிகார திமிரு, துஷ்பிரயோகம், அரசியல் லாபத்திற்காக இதுபோன்று மிரட்டி பார்க்கிறார்கள். இதுபோன்ற ஆதிக்கம், ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் தொடர்ந்தால் முந்திரி காட்டை நோக்கி பயணம் செய்யும் காலம் வந்துவிடும் என எச்சரிக்கை செய்கிறோம்.

இவ்வாறு அவர் ேனார்.


Next Story