மத்திய அரசு, கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்


மத்திய அரசு, கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

பேட்டி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன் திருவாரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவின்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை கைவிட்டு, அந்தந்த மாநில கல்விக் கொள்கைகளின் படி கற்பித்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

நாளை ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை)காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்

மத்திய அரசு கல்வியினை மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மாநில பட்டியலில் கல்வியை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story