காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் கல்லணையில் இன்று ஆய்வு


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் கல்லணையில் இன்று ஆய்வு
x

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் கல்லணையில் இன்று ஆய்வு

தஞ்சாவூர்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக எஸ்.கே.ஹல்தர் பொறுப்பு வகித்து வருகிறார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 23-ந் தேதி ஆணையத்தின் 16-வது கூட்டம் புதுடெல்லியில் நடைபெறுகிறது.

இதற்கிடையில் காவிரியில் மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் எவ்வளவு நீர் உள்ளது என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர், ஆணையத்தின் உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியை அவர்கள் ஆய்வு செய்தனர்.

கல்லணையில் ஆய்வு

இன்று (வெள்ளிக்கிழமை) மேட்டூர் அணையை பார்வையிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கல்லணைக்கு பிற்பகல் வருகின்றனர். அங்கு ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு திருச்சியில் ஓய்வெடுத்த பின்னர் நாளை (சனிக்கிழமை) திருச்சியிலிருந்து விமானம் மூலம் புதுடெல்லிக்கு செல்ல உள்ளனர்.


Related Tags :
Next Story