திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரமத்திற்கு லாரியில் வந்த தேர்


திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரமத்திற்கு லாரியில் வந்த தேர்
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு லாரியில் தேர் கொண்டுவரப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு லாரியில் தேர் கொண்டுவரப்பட்டது.

கைலாசாவின் தூதரகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. இதில் கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது. இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு வருவதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பகவான் நித்யானந்த பரமசிவத்தின் 46-வது அவதார தின தொடர் கொண்டாட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நடைபெற்று வருகின்றது.

இதையொட்டி கடந்த 6-ந்தேதி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை கொண்டாப்பட உள்ளது.

லாரியில் வந்த தேர்

இந்த நிலையில் நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு லாரியில் தேர் கொண்டு வரப்பட்டது. அதனை கிரேன் உதவியுடன் லாரியில் இருந்து இறக்கி ஆசிரமத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

இந்த தேர் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும், அவதார தின விழா நிறைவின் போது கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆசிரமத்தின் அருகில் இருந்த சிடர்களிடம் கேட்ட போது, பல்வேறு கோவில்களில் தேரோட்டடம் நடத்தப்படாமல் உள்ளதால் தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தேர் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் எங்கிருந்து தேர் கொண்டு வரப்பட்டது என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.

திடீரென நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு தேர் கொண்டு வரப்பட்ட தகவல் கிரிவலப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story