சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சோதனைச்சாவடி கட்டிடம்


சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சோதனைச்சாவடி கட்டிடம்
x

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சோதனைச்சாவடி கட்டிடம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே பாழடைந்த போலீஸ் சோதனைச்சாவடி கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ேசாதனைச்சாவடி

வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு பகுதியில் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. அதன் அருகில் ரேஷன் கடையும் உள்ளது. வங்கிக்கும், ரேஷன் கடைக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் வந்து செல்கின்றனர். வங்கியின் எதிர்புறம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து வேதாரண்யத்திற்கும் தங்கம், கஞ்சா போன்ற பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இந்த சோதனைச்சாவடியில் இருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பாழடைந்த மண்டபம்போல்...

கடந்த 10 ஆண்டு காலமாக இந்த சோதனைச்சாவடி மூடப்பட்டு தற்போது இந்த சோதனைச்சாவடி கட்டிடம் பாழடைந்த மண்டபம் போல் காட்சி அளிக்கிறது. இந்த கட்டிடம் மிகுந்த சேதம் அடைந்து எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

வங்கியின் எதிர்புறம் உள்ள இந்த பாழடைந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இதனால் வங்கியின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் இந்த சோதனைச்சாவடி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story