சாலை அமைக்கும் பணியை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு


சாலை அமைக்கும் பணியை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு
x

வந்தவாசியில் சாலை அமைக்கும் பணியை தலைமை பெறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

வந்தவாசி-சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலமாக செய்யூர்-வந்தவாசி-சேத்துப்பட்டு- போளூர் சாலை கிழக்கு கடற்கரை சாலையுடனான இணைப்பு சாலை இருவழித்தட சாலையாக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 கிலோ மீட்டர் நீளமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் நீளமும் உள்ள சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 உயர்மட்ட பாலங்கள், 12 சிறுபாலங்கள், ஒரு ெரயில்வே கீழ்பாலம், 214 வாய்க்கால் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இத்திட்டத்தில் வந்தவாசி நகருக்கு 6 கிலோ மீட்டர் நீளத்திற்கும், சேத்துப்பட்டில் 3½ கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வந்தவாசி பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை சாலை மேம்பாட்டு பணி தலைமை பொறியாளர் எம்.கே.செல்வன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லட்சுமிகாந்தன் உடன் இருந்தார்.


Next Story