கோத்தகிரியில் ஜான் சல்லிவன் நினைவகத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பார்வையிட்டார்
கோத்தகிரியில் ஜான் சல்லிவன் நினைவகத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பார்வையிட்டார்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரும், ஊட்டி நகர் மற்றும் ஏரியை நிர்மாணித்தவருமான ஆஜான் சல்லிவன் நினைவகம் மற்றும் பூங்கா கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த நினைவகத்தில் அவரது புகைப்படங்கள், நீலகிரி மாவட்டத்தின் பழைய மற்றும் புதிய புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் சென்னை ஐகோர்டடு் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த ஐகோர்ட்டு நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் கன்னேரிமுக்கு ஜான் சல்லிவன் நினைவகத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தலைமை நீதிபதி அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து நினைவகத்திலும், ஜான் சல்லிவனின் உருவச் சிலைக்கு அருகிலும் நின்றுக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் அவருக்கு ஜான் சல்லிவன் கமிட்டி சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட நீதிபதி முருகன், கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு வனிதா உள்பட கோத்தகிரி வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.