தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில் பராமரிப்புக்கு மானியம் வழங்கினார் முதல் அமைச்சர்
தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக காசோலையை முதல் அமைச்சர் வழங்கினார்.
சென்னை,
2022 - 2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், "தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 திருக்கோயில்களில் பெரும்பாலானவற்றில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் 3 கோடி ரூபாய் அரசு மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக 3 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களிடம் வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story