துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி


துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி
x

பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சி 8-வது வார்டில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பயாஸ் அஹம்மத் (வயது 40) என்பவர் பணி புரிந்து வருகிறார். குப்பைகளை சரிவர எடுக்காமலும், வார்டில் உள்ள பெண்களையும், பொதுமக்களிடம் ஆபாசமாகவும், அவதூறாகம் பேசி ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் முஜம்மில் அஹம்மத், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வதாஸ் ஆகியோரிடம் ஒப்பந்த துப்புரவு பணியாளர் பயாஸ் அஹம்மதை தங்கள் வார்டிலிருந்து மாற்றும்படி பொதுமக்கள் அளித்த புகாரை அளித்து முறையிட்டார்.

இதனையறிந்த பயாஸ் அஹம்மத் மீண்டும் பொதுமக்களிடம் புகார் யார் கொடுத்தது என கேட்டு தகராறில் ஈடுபட்டார். பின்னர் துப்புரவு ஆய்வாளரிடம் சென்று தகராறு செய்து தீக்குளிப்பேன் என மிரட்டினார். இந்நிலையில் நேற்று பயாஸ் அஹம்மத், தனது மனைவியுடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் நின்று தன்னை வேறு வார்டிற்கு மாற்றக்கூடாது என கூச்சலிட்டு தகராறில் ஈடுப்பட்டார், திடீரென நகராட்சி அலுவலகம் எதிரில் சாலையில் குப்பை வண்டியுடன் நின்றுகொண்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த பொதுக்கள் தடுத்தனர்.

இதனையறிந்த துப்புரவு ஆய்வாளர் அருள்செல்வதாஸ், பேரணாம்பட்டு போலீசார் அவரை எச்சரித்தனர். அதற்கு தன்னை வேறு வார்டிற்கு மாற்றக் கூடாது என கூறினார்.

இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story