செங்கத்தில் இடையூறாக திரிந்த மாடுகளை துப்புரவு ஊழியர்கள் பிடித்து சென்றனர்

செங்கத்தில் இடையூறாக திரிந்த மாடுகளை துப்புரவு ஊழியர்கள் பிடித்து சென்றனர்
x

செங்கத்தில் இடையூறாக திரிந்த மாடுகளை துப்புரவு ஊழியர்கள் பிடித்து சென்றனர்

திருவண்ணாமலை

செங்கம்

செங்கத்தில் இடையூறாக திரிந்த மாடுகளை துப்புரவு ஊழியர்கள் பிடித்து சென்றனர்

செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மெயின் ரோடு, போளூர் ரோடு, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, தளவாநாயக்கன்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிந்து வந்தன. இதனால் பொதுமக்கள், வாகனஓடட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் பிடித்துச்சென்றனர். அவை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டன.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலைகளில் மீண்டும் மாடுகள் சுறறி திரிவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story