கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது


கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது
x

கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரை செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30-க்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்தை கடந்த போது என்ஜினின் மேல் பகுதியில் உயர் அழுத்த கம்பியில் உரசியவாறு வரும் மின்சாரத்தை சேகரிக்கும் 'பாண்டோகிராப்' என்ற கருவி உடைந்து சேதமானது. இதனால் ரெயில் இயங்க முடியாமல் நடு வழியிலேயே நின்றது.

இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து ரெயில்வே மின்துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை - பெங்களூரூ லால்பார்க் எக்ஸ்பிரஸ், சென்னை - ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்களும் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன. 2 மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. அதன்பின் மற்ற ரெயில்களும் புறப்பட்டன. இந்த தாமதத்தால் பயணிகள் அவதிப்பட நேர்ந்தது.



Next Story