மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக வீடு வழங்கிய கலெக்டர்


மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக வீடு வழங்கிய கலெக்டர்
x

மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கலெக்டர் வீடு வழங்கினார்.

விருதுநகர்


சிவகாசி அருகே உள்ள கீழத்திருத்தங்கல்லை சேர்ந்தவர் லதா. இவர் தனது 11 வயது பேரன் தினேஷ் மனவளர்ச்சி குன்றிய நிலையில் அவருடன் ரூ. 500 வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் வயது முதிர்வு காரணமாக மன வளர்ச்சி குன்றிய பேரனை பராமரிக்க முடியாத நிலையில் கலெக்டரிடம் தனது பேரனுக்கான மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ. 1,500 மட்டுமே தனக்கு வாழ்வாதாரமாக உள்ளது. வயது முதிர்ச்சி காரணமாக தன்னால் பேரனை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதால் பேரனை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்கவும், தனக்கு வீடு வழங்கியும் உதவிடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார். கலெக்டர் ஜெயசீலன் உடனடியாக சிவகாசி ஆனையூர் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் தரைத்தளத்தில் மூதாட்டி லதாவுக்குவீடு வழங்கியவுடன், அவரது பேரன் தினேசை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக உதவி செய்த கலெக்டர் ஜெயசீலனுக்கு லதா நன்றி தெரிவித்தார்.


Related Tags :
Next Story