மனநலம் பாதித்து குணமடைந்தவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கலெக்டர்


மனநலம் பாதித்து குணமடைந்தவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கலெக்டர்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் மனநலம் பாதித்து குணமடைந்தவர்களை குடும்பத்தினரிடம் கலெக்டர் செந்தில்ராஜ் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை உறவினர்களிடம் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் ஒப்படைத்தார்.

ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 240 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுகொடுத்தனர். கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்பில் மீட்கப்பட்டு நாசரேத் நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணமடைந்த 3 பேரை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்பு திட்டம்) ஜேன் கிறிஸ்டிபாய், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முத்துகுமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறும் போது, மாவட்டத்தில் மனநலம் குன்றியவர்கள், நோய்வாய்பட்டவர்கள் பலர் வழிகாட்டு தலங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் உள்ளனர்.

இதனால் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வீடு இல்லாத, மனநலம் பாதிக்கப்பட்ட வயதானவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து வருகிறோம். அவர்கள் கோவில்பட்டி, நாசரேத் பகுதியில் உள்ள காப்பகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருச்செந்தூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில், மாணவர்கள் இல்லாததால், அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாசரேத் நல்லசமாரியன் மனநலம் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 3 பேருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 3 பேரையும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.


Next Story