ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பல்வேறு காரணங்களினால் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்பிட, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பொருட்டு மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 24-வது வார்டு, நாயக்கனேரி கிராம ஊராட்சியில் 1 முதல் 9-வது வார்டு வரை, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிப்பட்டு ஊராட்சியில் 5-வது வார்டு, கந்திலி ஊராட்சி ஒன்றியம், சுந்தரம்பள்ளி ஊராட்சியில் 8-வது வார்டு என மொத்தம் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடைபெற உள்ள தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story