வயலில் களை எடுத்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
பறக்கையில் வயலில் களை எடுத்த பெண்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் குறைகளை கேட்டறிந்தார்.
நாகர்கோவில்:
பறக்கையில் வயலில் களை எடுத்த பெண்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் குறைகளை கேட்டறிந்தார்.
நெல் கொள்முதல் நிலையம்
பறக்கை ஊராட்சிக்கு உட்பட்ட கால்நடை மருந்தக வளாகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் நெல் கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பறக்கை பத்து முதல் தாமரைக்குளம் வரை சுமார் 228 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. இதனால் கால்நடை வளாகத்தில் கூடுதல் கட்டுமான பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பெண்களிடம்...
மேலும் அப்பகுதியில் வயல்வெளியில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் (பொறுப்பு) ஆல்பர்ட் ராபின்சன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பறக்கை ஊராட்சி தலைவர் கோசலை, விவசாய சங்க பிரதிநிதி பெரியநாடார் உள்பட பலர் உடனிருந்தனர்.