அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு


அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தக பிரிவு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். மேலும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருகிறார்களா? என வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

பின்னர் நோயாளிகளை கனிவுடன் கவனிக்கவும், அவர்களுக்கு திருப்திகரமான சிகிச்சைகள் மேற்கொள்ளவும், தனியார் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சையைவிட நல்லமுறையில் சிகிச்சை அளிக்கவும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது வேலூர் தாசில்தார் செந்தில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story