மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்


மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று நடந்த மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்திருந்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுடன் தனியாக நாற்காலியில் அமரவைக்கப்பட்டு இருந்தனர். இக்கூட்டத்திற்கு வந்த கலெக்டர் செந்தில்ராஜ், மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

தொடர்ந்து கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்விஉதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story