குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி -கலெக்டர் வழங்கினார்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை கலெக்டர்அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்
மனுக்கள்
கூட்டத்தில், பால்வளத் துறைகளின் சார்பில் மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 36 ஆயிரத்து 498 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே கலெக்டர் சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, தொழிலாளர் நல ஆணையர் கோட்டீஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கதிர்வேலு உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை
மேலும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியின் சார்பில் மாவட்டகலெக்டரிடம் கொடுத்த மனுவில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காளையார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நூற்றாண்டை கடந்து அதிக மாணவர் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. பள்ளியில் தற்போது 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் இடவசதி இல்லை. நெருக்கடியான சூழலில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி அருகில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. எனவே இந்த இடத்தை இப்பள்ளியின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.