தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்


தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

முதுகுளத்தூர் பகுதிகளில் ஆய்வு செய்த கலெக்டர் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

கலெக்டர் ஆய்வு

முதுகுளத்தூர் கிராம பகுதிகளில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பிரபுக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீசல் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களை அழைத்து பொதுமக்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்த கலெக்டர், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில்,

எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, குடிதண்ணீர், சாலை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ள நிலையில் சரியான மருத்துவ வசதி கிடையாது. எனவே இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக செவிலியர்களை நியமிக்க வேண்டும்.

கோரிக்கை

மேலும் திருவரங்கத்தில் உள்ள மதுக்கடை எங்கள் கிராம பகுதிக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த மதுக்கடையை திறக்கக்கூடாது என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கலெக்டரிடம் பொதுமக்கள் தனித்தனியாக மனு அளித்தனர். பின்னர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பகுதியில் உள்ள குறைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தர்.

குறைகள் கேட்பு

நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் தீபா நீதி ராஜன், கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன், ஊராட்சி செயலர் சிவப்பிரியா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மைக்கேல்பட்டினம் கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைதேரோஸ் சிங்கராயர், ஊராட்சி செயலாளர் நீதாவதி ஆகியோர் உடன் உடன் இருந்தனர்.


Next Story