மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்


மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நாட்டறம்பள்ளி அருகே ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளியில் உள்ள அமிர்த சரோவர் ஏரிக்கரையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அப்பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. விழாவில் ஊராட்சிகள் இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story