செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் சென்ற கலெக்டர்
ராணிப்பேட்டையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் கலெக்டர் சென்றார்.
ராணிப்பேட்டை
சென்னை மாமல்லபுரத்தில் நாளை (28-ந் தேதி) தொடங்க உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நேற்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை ராணிப்பேட்டையில் தொடங்கிவைத்தார்.
விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் வாலாஜா பஸ் நிறுத்தம் வரை தீபத்தை கையில் ஏந்தி ஓடினார்கள். கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் அவர்களடன் ஓடினார். தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தியும் இதில் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story