இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் செய்தனர்

மயிலாடுதுறை

புதிய மின் மசோதா சட்டத்தை திரும்ப பெறக்கோரி சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய மின் மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயிர் காப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கொப்பரை தேங்காயை கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story