இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x

ராணிப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டியும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் கம்யூனிஸ்டு கட்சியினர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.


Related Tags :
Next Story