சமுதாயக்கூட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


சமுதாயக்கூட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

கோத்தகிரி அருகே சமுதாயக்கூட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட ஈளாடா காந்தி நகரில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்த கிராமத்தில் சமுதாயக்கூடம் இல்லை. இதனால் மக்கள் சிரமம் அடைந்தனர். இதுதொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதையடுத்து ரூ.8 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஆனால், ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என கூறி ஒப்பந்ததாரர் கடந்த 1½ ஆண்டுகளாக பணிகளை பாதியில் நிறுத்தி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காந்தி நகர் பொதுமக்கள் சமுதாயக்கூடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சமுதாயக்கூடம் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், அரசின் நிதி மற்றும் மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. இதுகுறித்து மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமுதாயக்கூட கட்டுமான பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story