போட்டியில் பங்கேற்ற பாய்மரப்படகு கவிழ்ந்தது
வடக்கன்குளம் அருகே போட்டியில் பங்கேற்ற பாய்மரப்படகு கவிழ்ந்தது.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பெருமணலில் இருந்து உவரி வரை மீனவர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டான பாய்மர படகு போட்டி நேற்று நடைபெற்றது. உவரியில் இருந்து 8 படகுகளில் தலா 10 வீரர்கள் வீதம் போட்டியில் பங்கு பெற்றனர். போட்டியின் போது கடலுக்குள் சென்ற ராஜன் என்பவரது படகு அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடல் நீரில் கவிழ்ந்த படகில் மீனவர்கள் தத்தளித்தவாறு படகுடன் பாதுகாப்பாக கரைக்கு திரும்பினர். இதைத் தொடர்ந்து 7 படகுகள் மட்டுமே போட்டியில் பங்கேற்று பெருமணலில் இருந்து உவரி வரை 25 மைல் தூரம் சென்றது.
Related Tags :
Next Story