வீட்டின் கான்கிரீட் காரை இடிந்து விழுந்து வாலிபர் பலி


வீட்டின் கான்கிரீட் காரை இடிந்து விழுந்து வாலிபர் பலி
x

கோவையில் நள்ளிரவில் வீட்டின் கான்கிரீட் காரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நள்ளிரவில் வீட்டின் கான்கிரீட் காரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பிளாஸ்டிக் கதவு அமைக்கும் வேலை

கோவை ராமநாதபுரம் பாரதியார் நகர் கணபதி காலனியை சேர்ந்தவர் வினோத்கண்ணன் (வயது 33). இவர், வீடுகளுக்கு பிளாஸ்டிக் கதவு அமைக்கும் வேலை செய்து வருகிறார்.

இவரு டைய மனைவி சாரு (30). இவர்களுக்கு சிவானி (3) மற்றும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர்களுடன் வினோத் கண்ணனின் பெற்றோரும் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வினோத் கண்ணன், தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அனைவ ரும் தூங்க சென்றனர்.

எப்போதும் படுக்கை அறையில் தூங்கும் வினோத் கண்ணன் நேற்று வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கினார். அங்கு மின்விசிறி ஓடிக்கொண்டு இருந்தது.

காரை விழுந்து பலி

அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று வீட்டின் மேல் உள்ள கான்கிரீட் காரை இடிந்து வினோத் கண்ணன் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த சத்தம் கேட்டு வந்த மனைவி சாரு மற்றும் பெற்றோர், வினோத் கண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று, வினோத் கண்ணனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story