திங்கள்சந்தை அருகே காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்


திங்கள்சந்தை அருகே  காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
x

திங்கள்சந்தை அருகே காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

திங்கள்சந்தை அருகே காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

நூதன போராட்டம்

நெய்யூர் தனியார் மருத்துவமனையில் இருந்து இரணியல் ரெயில் நிலையம் செல்லும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ளது.இந்த சாலையை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலை துறைக்கு பல மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. இதையடுத்து சாலையை செப்பனிடாத நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க கோரியும் காங்கிரஸ் சார்பில் வாழை நடும் போராட்டம் நேற்று நடந்தது.

இந்த நூதன போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி உதயம், பிரின்ஸ் எம்.எல்.ஏ., ஆத்திவிளை ஊராட்சி துணைத் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டு நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ெரயில் நிலையம் செல்லும் குண்டும் குழியுமான சாலையில் வாழை மரங்களை நட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story