ஐஸ்பிளாண்ட் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும்


ஐஸ்பிளாண்ட் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாணகிரியில் காவிரி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை அருகே ஐஸ்பிளாண்ட் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

மயிலாடுதுறை

வாணகிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மயிலாடுதுறை கலெக்டர் லலிதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ள பகுதிக்கு அருகே விவசாயத்தை பாதிக்கும் வகையில் ஐஸ் பிளாண்ட் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த பகதியில் இறால்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடிநீர் உப்புநீராக மாறிவருகிறது. தற்போது ஐஸ்பிளாண்ட் அமைத்தால் வாணகிரி, கீழபெரும்பள்ளம், பூம்புகார், காவேரிபூம்பட்டி னம் ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் பாதிப்பதோடு விவசாயமும் பாதிக்கும். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே வாணகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஐஸ்பிளாண்ட் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story