ரூ.70 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடக்கம்


ரூ.70 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே கோவிலூற்றில் ரூ.70 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே வெங்காடம்பட்டி பஞ்சாயத்து கோவிலூற்று மேலவௌவால் குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மேலவௌவால் குளத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் சுமார் ரூ.70 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், சாலை ஆய்வாளர் சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Next Story