ஜவுளி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது


ஜவுளி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
x

அருப்புக்கோட்டை அருகே ஜவுளி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

திருப்பூரில் இருந்து பனியன் ஜவுளிகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று, தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஈரோட்டை சேர்ந்த சீதாராமன் (வயது 52) ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி மயானம் அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதி, மறுபக்கம் பாய்ந்து சர்வீஸ் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story